News Just In

2/20/2020 12:10:00 PM

மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி


இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைத்த 30 / 1 பிரேரணையிலிருந்து உடனடியாக விலகுவதற்கான தீர்மானித்திற்கு இன்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இரா­ணுவத் தள­பதி சவேந்­திர சில்­வா­வுக்கு அமெ­ரிக்கா விடுத்­துள்ள பயணத்தடையை அடுத்தே , இவ்வாறே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைத்த பிரேரணையில் இருந்து விலகுவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக நேற்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

இந்நிலையில் , மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான பிரேரணைகளுக்கான இணை அனுசரணையை விலகிக்கொள்ள அமைச்சரவை ஏகமனதாக அனுமதிவழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: