News Just In

2/20/2020 11:42:00 AM

தேங்காயின் விலையில் திடீர் மாற்றம்


சதொச விற்பனை நிலையத்தினூடாக 65 ரூபாய்க்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தைகளில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 45 ரூபாய் தொடக்கம் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் தெங்கு தோட்டங்களின் அறுவடையை மக்களுக்கு சலுகை விலையில் வழங்கும் நோக்குடனே தேங்காய்களின் விலையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக உள்ளக வர்த்தகம் மற்றும் பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

No comments: