News Just In

2/20/2020 01:01:00 PM

போலி அடையாள அட்டை தயாரிப்பு - இருவர் கைது


போலி அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் ஆட்பதிவுத் திணைக்கள வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய உளவாளி ஒருவரூடாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லம்பிட்டி மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் வசிக்கும் சந்தேகநபர்கள் இன்று (20) கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் .

No comments: