பல்வேறு தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இதன் காரணமாக ஆசிரியர் இடமாற்ற சபைக் கூட்டம் நிறுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் கல்வியமைச்சு ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக விசேட செயலி (APP) ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. இதனூடாக இடமாற்றம் கோரும் ஆசிரியர்கள் தங்களது தேவைகளை குறித்த செயலியில் பதிவு செய்வதற்கான வசதியையும் கல்வியமைச்சு இதனூடாக வழங்கவுள்ளது.

No comments: