News Just In

2/19/2020 07:18:00 PM

சுமார் ஒரு இலட்சம் பிறப்பு பதிவுகளைக் கையாளும் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் துரித கதி சேவை!

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சுமார் ஒரு இலட்சம் பிறப்பு பதிவுகளைக் கையாளும் ஏறாவூர் நகர பிரதேச செயலக பதிவாளர் பிரிவில் சேவைக்காக வருவோர் 5 தொடக்கம் 15 நிமிட நேரத்தில் தங்களது ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளும் துரித கதி சேவை இடம்பெறுவதாக மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ. ஸக்கரியா தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலக பதிவாளர் பிரிவில்  இடம்பெறும் துரித கதி சேவை தொடர்பாக மேலும் விவரம் தெரிவித்த அவர், பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களின் சரியான விபரங்களைத் சமர்ப்பிக்கும் பட்சத்தில் ஆகக் கூடியது 15 நிமிடங்களே அவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

அந்த காலப்பகுதிக்குள் அவர்களது கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு அவர்களது கோரிக்கைக்கு அமைந்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டு விடும்.

இதன் காரணமாக நாளாந்தம் ஏறாவூர் நகர பிரதேச செயலக பதிவாளர் அலுவலகம் நாளாந்தம் சுமார் 15 நிமிட கால அவகாசத்தில் 80 ஆவணங்களை வழங்கி வருகின்றது.

ஏறாவூர் நகர பிரதேச பிறப்பு இறப்பு விவாகப் பதிவாளர் பிரிவுகளில் இடம்பெறும் பிறப்பு இறப்பு விவாகப் பதிவுகள், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு இறப்பு மரணங்கள் உள்ளிட்ட தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் அனைவரினதும் ஆவணங்களை ஏறாவூர் நகர பிரதேச செயலக பதிவாளர் அலுவலகம் ஒன்லைன் மூலம் கையாள்கிறது.

No comments: