விளக்கமறியலில் இருந்த நண்பனுக்கு வாழைப்பழத்தினுள் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து கொடுக்க முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது கம்பளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கம்பளை கிரப்பனையை சேர்ந்த நபரே இவ்வாறு நீதிமன்ற வளாக சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்ட தனது நண்பருக்கு உணவுப் பொதியொன்றினை வழங்க சிறைக் காவலர்களிடம் அனுமதி பெற்று மரக்கறி ரொட்டி மற்றும் வாழைப்பழத்தினை வழங்க முயற்சித்துள்ளார்.
குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் சிறைக் காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து கம்பளைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வாழக்கைப்பழத்தினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 540 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: