மட்டக்களப்பினை சேர்ந்த கதிர்காமத்தம்பி விமலநாதன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக நியமனம் பெறுள்ளார் என தெரியவருகிறது.
இவர் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேலதிக அரசாங்க அதிபரும், அம்பாறை மாவட்ட முன்னாள் மேலதிக அரசாங்க அதிபராகவும் சேவையாற்றியுள்ளார், இறுதியாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி வகித்து தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு-கல்லடி பிரதேசத்தினை சேர்ந்த விமலநாதன் சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவருமாவார்.

No comments: