முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்பட நபர்களுக்கு எதிராக பாதுகாக்கப்பட்ட வில்பத்து சரணாலயத்தின் காட்டுப் பகுதியினை அழித்து முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும்சட்ட விரோத கட்டுமானங்கள் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு
தாக்கல் செய்திருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஜனத் டீ சில்வா மற்றும் நிஷங்க பந்துல கருணாரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த ரீட் மனு விசாரணைக்கு எடுத்து, விசாரணைகளை நிறைவு செய்த நீதிபதிகள் குறித்த ரீட் மனு மீதான தீர்ப்பானது ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி அறிவிக்கப்படுமென தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: