News Just In

2/20/2020 07:30:00 AM

கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி பலி!

மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...
கல்விச் சுற்றுலா நிமித்தம் வருகை தந்திருந்த மாணவர்கள் நால்வர் திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி பிரதேச வாவியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மாணவர்கள் நால்வரும் பதுளை ஹாலி எல பகுதியைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்பவர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் தற்பொழுது கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கோமரன்கடவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments: