News Just In

2/28/2020 03:53:00 PM

பல்கலைக்கழக சிசிரிவி கமெராக்களை கழற்றிய பௌத்த பிக்கு மாணவன் உட்பட 4 பேருக்கு விளக்கமறியல்!- 25 மாணவர்களுக்கு 2 வருட வகுப்புத் தடை


களனி பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி ​கமெராக்களை கழற்றியமை தொடர்பான வழக்கில் 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 4 பேரையும் மார்ச் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 பேரில் பௌத்த பிக்கு மாணவர் ஒருவரும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

களனி பல்கலைக்கழக சிசிரிவி கழற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர் சங்கத்தின் தலைவர் உட்பட 16 பேர் கிரிபத்கொடை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அதில் 12 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய நான்கு பேரும் மஹர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதன்படி, பிக்கு மாணவர் ஒருவர் உட்பட நான்கு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, களனி பல்கலைக்கழக சிசிரிவி கழற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இனங்காணப்பட்ட 25 மாணவர்களுக்கு இரண்டு வருடங்கள் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழக தொடர்பாடல் மற்றும் ஊடக பிரிவு அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, பல்கலைக்கழக நிர்வாக சபையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சிசிரிவி கெமரா அமைப்பை மீண்டும் விரைவில் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments: