சிறுவர் இல்லங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக சிறுவர் இல்லங்களை தரப்படுத்துவதற்கான நடவடிக்கை துரிதமான முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
3 கட்டங்களாக இடம்பெறவுள்ள இந்த தரப்படுத்தலில் 1 நட்சத்திரம் , 2 மற்றும் 3 நட்சத்திரம் என்று வகைப்படுத்தப்படும் என்று அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதான பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான சிறுவர் இல்லங்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படள்ளதாகவும் , அதற்கு அமைவாக ஒரு நட்சத்திர சிறுவர் இல்லத்தை அடையாளப்படுத்துவதற்காக சிவப்பு நிறமும் , 2 நட்சத்திர சிறுவர் இல்லத்துக்காக செம்மஞ்சள் நிறமும் , 3 நட்சத்திர சிறுவர் இல்லத்துக்காக பச்சை நிறமும் பயன்படுத்தப்படவுள்ளது.
சிறுவர்களின் எண்ணிக்கைக்கு அமைவாக சிறுவர் இல்லங்களில் இட வசதி கட்டில்கள் , ஏனைய தேவைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி இந்த தர நிர்ணய சான்றிதழ் வழங்கப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: