News Just In

1/23/2020 01:49:00 PM

மட்டக்களப்பில் பட்டதாரிகளை சந்தித்த பிரசாந்தன்-வேறு வேலை பார்க்கும் பட்டதாரிகளுக்கு நியமனம் இல்லை!


மட்டக்களப்பில் இன்று பட்டதாரிகள் கையெழுத்து போராட்டம் ஒன்றை மூன்றாவது நாளாக முன்னெடுத்தனர். பட்டதாரிகள் அனைவருக்கும் பாரபட்சம் இன்றி வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும், அத்துடன் இந்த நியமனங்களை வழங்குவதற்கு காலதாமதிக்காமல் உடன் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பட்டகாரிகளின் இந்த கையெழுத்து நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இதில் பட்டதாரிகளால் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்த பிரசாந்தன்

ஜனாதிபதி தந்த வாக்கை காப்பாற்றுவார் இந்த பட்டதாரிகளின் நியமனத்தில் கடந்த ஆட்சியில் உள்வாரி, வெளிவாரி எனும் புறக்கணிப்புக்கள் இருந்தாலும், இந்த ஆட்சியில் அவ்வாறு நடக்காது என்றும், ஜனாதிபதி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது இது தொடர்பான கோரிக்கைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கொண்டு சென்று இதற்கான தீர்வினை பெற்றுத்தருவோம்,

கடந்த ஆட்சிக் காலத்தில் நிறைய வாக்குறுதிகளை வழங்கினார்கள், ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை, அத்துடன் கிழக்கை தற்போது நடுத்தெருவில் விட்டுள்ளனர்,  இதனால்தான் தற்போது மக்கள் அனைவரும் சேர்ந்து ஆட்சியை மாற்றி இருக்கிறார்கள்,

இந்த ஜனாதிபதிக்கு நாங்கள் ஆதரவாக தேர்தலில் வேலை செய்துள்ளதால் இந்த பட்டதாரிகளின் நியமனத்தில் பொறுப்புக் கூற வேண்டிய கடமை எங்களிடத்தில் உள்ளது என்றும், அவர் மேலும் தெருவித்தார்

இதன்போது தற்போது வேறு அரச வேலை பார்க்கும் எந்த ஒரு பட்டதாரிகளும் இந்த நியமனத்தில் உள்வாங்கப்படக் கூடாது என பட்டதாரிகள் சங்கத்தினாரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.














No comments: