News Just In

1/23/2020 01:05:00 PM

மட்டக்களப்பில் உழவு இயந்திரம்,துவிச்சக்கரவண்டி மோதிய விபத்து-விவசாயி பலி


மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் கோரக்களப்பு குளப் பகுதியில் உழவு இயந்திரம் துவிச்சக்கரவண்டியுடன் மோதுண்ட விபத்தில் துவிச்சக்கரவண்டியில் சென்ற விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) (22) திகதி மாலையில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

கிரான் விஷ்ணுகோவில் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய முத்துலிங்கம் குணசேகரன் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விவசாயி துவிச்சக்கரவண்டியில் சம்பவதினமான நேற்று மாலை புலிபாய்ந்தகல் கோரக்களப்பு குளப்பகுதியிலுள்ள வயலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மண் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் பின்பகுதி குறித்த துவிச்சக்கரவண்டியை கொழுவி இழுத்து விபத்துக்குள்ளானதில் விவசாயி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளளார்.

இதனையடுத்து பொலிசார் உழவு இயந்திர சாரதியை கைது செய்ததுடன் உயிரிந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வாழைச்;சேனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்

இது தொடப்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

No comments: