News Just In

1/23/2020 09:44:00 PM

மட்டக்களப்பில் சில முக்கிய ஊடகவியலாளர்களுக்கு மரண எச்சரிக்கை !!


(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு எச்சரிக்கை கொலை மிரட்டல் துண்டுப்பிரசுரம் மட்டு.ஊடக அமையத்தில் நிலையத்தில் வீசிவிப்பு.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தியத்தில் உள்ள தலைவர்,செயலாளர் உட்பட சில ஊடகவியலாளர்களுக்கு எச்சரிக்கை கொலை மிரட்டல் துண்டுப்பிரசுரத்தை மட்டு.ஊடக அமையத்தில் வீசப்பட்டுள்ளது.இவ்வாறு 25துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளது.இத்துண்டுப் பிரசுரமானது இன்று வியாழக்கிழமை(23)மட்டு.ஊடக அமையத்தை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் திறந்து பார்த்த போது இத்துண்டுப்பிரசுரம் காணப்பட்டது.

"எச்சரிக்கை! எச்சரிக்கை! எனும் தலைப்பில் மஞ்சள் நிறத்திலே போடப்பட்டுள்ளது.அண்மையில் எடுத்துக்கொள்ள நினைவுதின அஞ்சலி நிகழ்வுகளில் எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படத்தில் வட்டம் போட்டு அடையாளப்படுத்தியே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"இவர்கள்தான் வெளிநாட்டில் புலிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அரசுக்கு எதிராக செயற்படும் ரிப்போட்டர்ஸ்!.இவர்களுக்கு விரைவில் மரண தண்டனை விதிப்போம்" என விசமிகளால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் காணப்படுகின்றது.குறிப்பாக மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார்,செயலாளர் செ.நிலாந்தன்,பு.சசிகரன்,மற்றும் ந.நித்தியானந்தன்,வ.சக்திவேல்,கு.சுபஜன்,சு.குணலிங்கம் ஆகியோர்களின் நிழற் பிரதிகளை வட்டமாக அடையாளப்படுத்தி இவர்களுக்கு விரைவில் மரண தண்டனை விதிப்போம் என துண்டுப்பிரசுரம் மட்டு.ஊடக அமையத்தில் கதவுக்கு கீழே உள்ளே வீசப்பட்டது.

இவ்விடயமாக மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினர் மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் இன்று மாலை முறைப்பாடு வைத்ததோடு இவ்வாறான விசமிகளை இனங்காணுவதற்கும், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் ஊடகத்துறை அமைச்சர்,ஆகியோர்களுக்கும் மகஜர் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




No comments: