News Just In

1/23/2020 09:31:00 PM

மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மாநகர சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி தரத்தினையும், அவர்களின் கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி விநாயகர் வித்தியாலயம், அரசடி பிள்ளையார் கனிஷ்ட வித்தியாலயம், புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் கொக்குவில் விக்ணேஷ்வரா வித்தியாலயத்தியலங்களில் கல்விகற்கும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வளங்கிவைக்கப்பட்டன.

குறித்த பாடசாலைகளின் அதிபர்களின் தலைமையில் இடம்பெற்ற வெவ்வேறு நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான சிவம் பாக்கியநாதன்,  க.ரகுநாதன், சீ.ஜெயேந்திரகுமார் ஆகியோருடன், மாநகர சழுக மேம்பாட்டு உத்தியோகத்தர் ச.சந்திரகுமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.



















No comments: