News Just In

1/24/2020 05:16:00 PM

மட்டக்களப்பின் புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா உத்தியோகபூர்வ நியமனம்


இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு அரசாங்க அதிபர்கள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள், அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா உத்தியோக பூர்வமாக இன்று தனது நியமனத்தை பெற்றுள்ளார்.

அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தற்போது இடமாற்றம் பெற்று செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் இடமாற்றம் பெறப்போவதில்லை ஒய்வு பெறப்போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருமதி கலாமதி பத்மராஜா மண்முனை வடக்கு பிரதேச செயலாளராகவும் பின்பு மாகாணசபையின் உயர் பதவிகளையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: