அனுராதபுரம் மாபோதி விகாரைக்கு சமய சுற்றுலா மேற்கொண்ட வயோதிப தாய் ஒருவரும் அவரின் மகளும் தாங்கள் பயணித்த பஸ்சினால் மோதுண்டு உயிரிழந்த சம்பவமொன்று இன்று காலை கித்துல்கல பகுதியில் நடைபெற்றுள்ளது.
தாங்கள் பயணித்த பஸ்ஸிலிருந்து மற்ற பஸ் வண்டிக்கு செல்வதற்காக பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்த போது அவர்கள் பயணித்த பஸ் சடுதியாக முன்னோக்கி நகர்ந்ததால் அவ்விருவரும் பஸ்ஸின் சில்லில் சிக்கியுள்ளனர்.
அவ்விருவரும் மீட்கப்பட்டு கரவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 80 வயது தாயும் 48 வயதான அவரது மகளுமே உயிரிழந்ததாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை நிட்டம்புவ ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச் செல்ல முயன்ற வேளையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் நிலைக்குலைந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
வேயான்கொட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய வாலிபரே உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: