(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
ஏறாவூர் அந்நிழாமிய்யத்துல் மக்பியா அறபிக் கல்லூரியின் முதலாவது பட்டமிளிப்பு விழாவும். மனாகிப் தமாம் வைபவமும் தலைப்பாகை சூடும் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை 26.01.2020 காலை தொடக்கம் மாலை வரை இடம்பெறுமென்று கல்லூரி நிருவாகம் அறித்துள்ளது.
கல்லூரி அதிபர் மௌலவி எம். முபாறக் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுகளில் 5 மௌலவி மாணவர்கள் அல் ஹாபிழ் பட்டங்கப்படுவதோடு மேலும் மௌலவி மாணவர்கள் ஐவருக்கு தலைப்பாகை சூடும் நிகழ்வும் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வுகளில் புல்மோட்டை பத்ஹுஸ்ஸலாம் மகளிர் அறபிக் கல்லூரியின் பணிப்பாளர் அஷnஷய்யித் அப்துல்;லாஹ் கோயா தங்கள் முதன்மை அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
No comments: