News Just In

1/24/2020 12:36:00 PM

திருகோணமலை தனியார் விடுதியில் விபச்சாரம்-இளம் தம்பதி உட்பட 5 பேர் கைது!


திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கன்னியா பிரதேசத்தில் நேற்று (23) இரவு தனியார் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு ஆண் மற்றும் நான்கு பெண்கள் உட்பட ஐவரை கைது செய்ததாக திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 20 கிராம் கேரளா கஞ்சாவும், ஒரு கிராம் 680 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

பதுளையை வசிப்பிடமாக கொண்ட 25 வயதுடைய கணவரும் 22 வயதுடைய மனைவியும் இணைந்து இந்த விபச்சார விடுதியை நடாத்திச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் திருகோணமலை, மருதானை, குருநாகல் பிரதேசங்களை சேர்ந்த 21 முதல் 32 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்தாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

No comments: