காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காத்தான்குடி பொலிஸார் நடத்திய தேடுதல்களின்போது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தேடுதல் நடவடிக்கை வியாழக்கிழமை (23) நள்ளிரவு முதல் நேற்று (24) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன்போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள், போதைப் பொருளுடன் இருந்தவர்கள் அடங்கலாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தன்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியின் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட இந் நடவடிக்கை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிசின் உத்தரவின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஜெயரட்ணவின் வழிகாட்டலில் இடம்பெற்றது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றதில் ஆஜர்படுத்தி கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவை நீதிமன்றில் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
1/25/2020 08:00:00 AM
Home
/
உள்ளூர்
/
காத்தான்குடி
/
மட்டக்களப்பு
/
காத்தான்குடியில் இரவு முழுவதும் பொலிஸார் தேடுதல் வேட்டை-12 பேர் கைது!
காத்தான்குடியில் இரவு முழுவதும் பொலிஸார் தேடுதல் வேட்டை-12 பேர் கைது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: