News Just In

12/22/2019 03:35:00 PM

கல்லடியில் ஒன்பதாவது கண்ணகி கலை இலக்கிய விழா

மட்டக்களப்பு கண்ணகி கலை இலக்கியக்கூடல் ஒன்பதாவது தடவையாக ஏற்றுபாடு செய்த கண்ணகி கலை இலக்கிய விழா இன்று (22) கல்லடி துளசி மண்டபத்தில்வெகு விமர்சையாக இடம்பெற்றது.

பேராசிரியர் சே.யோகராசா தலைமையில் இடம்பெற்ற தொடக்க விழாவில் மாநகர முதல்வர் தி சரவணபவன், மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மண்முனை வ்டக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியிலாளர் திருமதி கலைவாணி வன்னியசிங்கம் கிழக்கு வளாக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட் தந்தை அ.நவரத்தினம் நவாஜி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு தொல்லியலாளர் அமரர் க.தங்கேஸ்வரியின் நினைவுப்பரவல் நிகழ்வு சிறப்பு அம்சமாக இடம்பெற்றதுடன், சட்டத்தரணி கி.துரைரா ஜசிங்கம் தலைமையில் தேசம் தழைத்திட வந்தாள் என்ற தலைப்பில் விசேட கவியரங்குமற்றும் கலாசார நிகழ்வுகள் கலாசார போட்டிகளில் திறமை காட்டியோருக்கு பரிசளிப்பு என்பனவும் இடம்பெற்றன.




























No comments: