News Just In

12/22/2019 03:03:00 PM

மாநகர பொழுதுபோக்கு கழக பொதுக் கூட்ட அமர்வும் கௌரவிப்பும்


மாநகர பொழுதுபோக்கு கழக வருடாந்த பொதுக்கூட்ட அமர்வு இன்று மட்டக்களப்பில் தலைவர் ச.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாநகர ஆணையாளர் k.சித்திரவேல், திருமதி. GH.சிவராஜா ஆகியோரும் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இக் கூட்ட நிகழ்வில் ஓய்வு பெற்ற 7 பேர் கௌரவிக்கப்பட்டதுடன், அங்ககத்துவம் வகிப்பவர்களின் பிள்ளைகளில்  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6 பிள்ளைகளுக்கும், பல்கலைக்கழகம் செல்லும் ஒரு பிள்ளைக்கும் பாராட்டும் அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

மாநகர பொழுதுபோக்கு கழக  2020 புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதில், தலைவர் - ச.சந்திரகுமார் ,செயலாளர் -s.கண்ணன், பொருளாளர் - p.விஜிதரன் ஆகியோர் முறையே தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






















No comments: