News Just In

11/12/2026 11:38:00 AM

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் நேற்று நடந்தது என்ன?

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் நேற்று  நடந்தது என்ன?




நுகர்வோருக்கு தொடர்ச்சியாக எரிவாயு விநியோகிக்கத் தவறியமை தொடர்பில், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு (LAUGFS Gas PLC) எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று  (11) கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, நிறுவனத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் கலந்துரையாட வேண்டியுள்ளதால், அதற்கான கால அவகாசத்தை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 86ஆவது பிரிவை மீறி, நுகர்வோருக்கு தொடர்ச்சியாக எரிவாயு விநியோகிக்கத் தவறியமை தொடர்பிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: