US launches Strikes on iran Qeshm island ahead of midterm elections: அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் தொடங்குவதற்கு முன்னதாக ஈரானிய தீவு மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஈரானிய தீவை குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
வெளியான தகவல் படி, அமெரிக்க படைகள் ஈரானின் கெஷ்ம்(Qeshm) தீவின் மீது வரம்பிற்குட்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது.
சர்வதேச கடல் வழி மற்றும் அப்பகுதியில் உள்ள அமெரிக்க நிலைகளுக்கு ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வந்த நிலையில் இந்த தாக்குதலானது பதிலடியாக கொடுக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பகுதியில் கடந்த சில வாரங்களாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ட்ரோன்கள் மற்றும் விமானங்களை குறிவைத்து ஈரான் பலமுறை தாக்குதல் நடத்தியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த தாக்குதலானது தற்காப்பு நடைமுறையாக மட்டுமே நடத்தப்பட்டு இருப்பதாகவும், ஈரான் மீது மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதலை தொடங்குவதற்கான அடையாளம் இது இல்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இரு தரப்பிற்கும் இடையே ராணுவ மோதல்கள் தொடர்ந்து வந்தாலும், அமைதிக்கான ராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

No comments: