
நாடு முழுவதும் உள்ள ஐந்து முக்கிய மருத்துவமனைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நியமனங்கள் நான்கு போதனா வைத்தியசாலைகளையும், சிறுவர் வைத்தியசாலையான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையையும் உள்ளடக்கியுள்ளன.
1. வைத்தியர் W.M.U.S. விஜேமான்ன – கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை (களுபோவில) பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. வைத்தியர் D.A.K. பெரேரா – கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை (ராகம) பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. வைத்தியர் குணசிங்கம் சுகுணன் – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. வைத்தியர் W.M.C.M. விஜேசிங்க – பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. வைத்தியர் W.A.P.P. ரத்னசேகர – சிறுவர்களுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments: