News Just In

11/27/2026 04:07:00 PM

சர்வதேச யுத்த குற்றங்களுக்கு முன்னுதாரணமான இலங்கை போர்!

சர்வதேச யுத்த குற்றங்களுக்கு முன்னுதாரணமான இலங்கை போர்!



இலங்கையில் போருக்குப் பின்னர் நிலவிய தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் நிலை, ஏனைய நாடுகளில் நடைபெறும் போர்களிலும் இத்தகைய மீறல்களைப் புரிபவர்களுக்குத் துணிச்சல் அளிக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் குற்றம் சுமத்தியுள்ளது.

உதாரணமாக 2023–2025 காலப்பகுதியில் 1,010-க்கும் மேற்பட்ட மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டமை என்ற விடயத்தை அடிகோடிட்டு மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்காலங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான நான்காம் ஜெனீவா உடன்படிக்கை (Fourth Geneva Convention) நடைமுறையில் பலவீனமடைந்து வருவதை இச்சம்பவங்கள் காட்டுகின்றன என அறிக்கை மேலும் விவரித்துள்ளது

மேலும், மோதல் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதைத் தடுப்பதன் மூலம், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் அடிப்படை நோக்கமே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் நிகழ்ந்த மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதி செய்வது என்பது வெறுமனே கடந்த காலத்திற்கான நீதி மட்டுமல்ல. எதிர்காலத்தில் உலகின் ஏனைய பகுதிகளில் நடைபெறும் போர்களில் மனிதாபிமானப் பணியாளர்களையும் பொதுமக்களையும் பாதுகாப்பதற்கும், சர்வதேசச் சட்டங்களின் நம்பகத்தன்மையை மீள நிலைநாட்டுவதற்கும் இது மிகவும் அவசியமானது என அறிக்கை வலியுறுத்தியுள்ளது

No comments: