(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தொழுநோயாளர்களுக்கான தொடர் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தொழுநோயாளர்கள், தமது தொடர்ச்சியான சிகிச்சைச் சேவைகளை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையிலும் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த வசதியளிப்புச் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே. புவனேந்திர நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளிஸ்வரன், சமூக நல மருத்துவ நிபுணர் நிலுக்கா குணதிலக்க, சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்புப் பிரிவு வைத்திய அதிகாரி டபிள்யூ.டி.என். செனவிரத்ன, மாவட்ட தொழுநோய் வைத்தியப் பொறுப்பதிகாரி வைத்தியர் லுபோஜிதா கமல்ராஜ், பொறுப்பு வைத்தியர்கள், சுகாதாரப் பரிசோதகர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சமூக நல மருத்துவ நிபுணர் நிலுக்கா குணதிலக்க, எதிர்வரும் 2035ஆம் ஆண்டுக்குள் இலங்கையிலிருந்து தொழுநோயை முற்றாக ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

.jpeg)
No comments: