இதுவரை காலமும் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த மட்டக்களப்பு கோட்டமுனை தபாலகத்தை புதிய சொந்தக் கட்டிடத்தில் அமைப்பதற்காக அரசடியில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
24 மில்லியன் ரூபாய் செலவில் கோட்டமுனை தபாலகத்திற்கான புதிய சொந்தக் கட்டிடம் அமையப் பெறவுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த கோட்டமுனை தபால் நிலையத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கு இணங்க, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் முயற்சியால் தற்போது புதிய சொந்தக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.
மாகாண தபால் திணைக்களத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கே. பிரகாஷ் தலைமையில் புதனன்று (11) நடைபெற்ற தபாலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாநகரசபை ஆணையாளர் என். தனஞ்செயன், மாநகரசபை உறுப்பினர்கள், மாவட்ட தபால் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

No comments: