News Just In

10/09/2026 03:36:00 PM

கறுப்பு ஜூலை இனக்கலவரம்: குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க புதிய விசாரணைஆணைக்குழு அவசியம் – இரா. சாணக்கியன்

கறுப்பு ஜூலை இனக்கலவரம்: குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க புதிய விசாரணைஆணைக்குழு அவசியம் – இரா. சாணக்கியன்



“தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழும் வகையில் புதிய அரசியலமைப்பு
உருவாக்கப்பட வேண்டும்” – பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரம் தொடர்பில் விசாரணைகளைமேற்கொள்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும்எனப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த தனிநபர்பிரேரணையை ஆதரித்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்இரா. சாணக்கியன் இன்று (09.10.2026) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனக்கலவரம்தொடர்பில் 2001ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்ககுமாரதுங்கவினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டதாகத்தெரிவித்த இரா. சாணக்கியன், குறித்த ஆணைக்குழு 2002 மற்றும் 2003ஆம்ஆண்டு காலப்பகுதியில் விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கையைச்சமர்ப்பித்ததாகக் குறிப்பிட்டார்.தொடர்ந்து, 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த இனக்கலவரத்தினால்பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த மக்களுக்காக அப்போதைய ஜனாதிபதிசந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தின் சார்பில் தமிழ்மக்களிடம் மன்னிப்புக் கோரியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இருப்பினும், இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனைவழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் நியமிக்கப்பட்ட விசாரணைஆணைக்குழுவின் அறிக்கையில், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கானவழிமுறைகள் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்த இரா. சாணக்கியன்,குற்றங்களை அடையாளம் காண்பதுடன் மட்டுமல்லாமல், அவற்றுடன்தொடர்புடையவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான முறையான பொறிமுறையும்உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரத்திற்கான பொறுப்பை ஒட்டுமொத்தசிங்கள மக்கள் மீதும் சுமத்தவில்லை எனக் குறிப்பிட்ட அவர்,
கலவரத்தின்போது தமிழ் மக்களைச் சிங்கள மக்கள் பாதுகாத்த பல சம்பவங்களும்இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
திட்டமிட்ட வகையில் கொழும்பு நகரில் ஆரம்பமான இந்த இனக்கலவரம், பின்னர்நாடு முழுவதும் பரவி தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக மாறியதாகவும், அதன்தாக்கம் இன்றளவும் தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும்,சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின்அறிக்கையில், பல்லாயிரக்கணக்கான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன்,பலர் படுகொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக இரா. சாணக்கியன்தெரிவித்தார்.

இவ்வாறான குற்றங்கள் அடையாளம் காணப்படும்போது, அவற்றுக்குப்
பொறுப்பானவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான முறைமையும் உருவாக்கப்படவேண்டும் என அவர் வலியுறுத்தினார். குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள்மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட்டாலும், குற்றவாளிகளுக்குத்தண்டனை வழங்குவதற்கான பொறிமுறை இல்லாதிருப்பதே நாட்டில் காணப்படும் பாரியபிரச்சினையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.1983ஆம் ஆண்டு இனக்கலவரத்திற்கு அரசியல் ரீதியாக ஆதரவு வழங்கியவர்கள்இன்றும் இருப்பதாகக் குறிப்பிட்ட இரா. சாணக்கியன், அவர்களும்பொறுப்புக்கூறச் செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே தமதுநிலைப்பாடு எனத் தெரிவித்தார்.

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் ஆராய்வதற்கான நடவடிக்கைகள்முன்னெடுக்கப்படுவதைப் போன்று, கறுப்பு ஜூலை இனக்கலவரம் தொடர்பிலும்முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக உண்மையைக் கண்டறிவது
மாத்திரம் போதுமானதல்ல எனத் தெரிவித்த அவர், குற்றங்களுடன்
தொடர்புடையவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறுதண்டனை வழங்கப்படும்போதே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும்என்றும் குறிப்பிட்டார்.

யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்என்றும், அவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் என்றும் தாம்வலியுறுத்துவதாக இரா. சாணக்கியன் தெரிவித்தார். எனினும், இந்தக்கோரிக்கையை ஒட்டுமொத்த இராணுவத்தினருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றகோரிக்கையாகச் சிலர் சித்தரிப்பதாகவும், அது தவறான நிலைப்பாட்டைஉருவாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் குற்றங்களுக்கு ஒத்துழைப்பு
வழங்கியவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்
என்பதே தமது கோரிக்கை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகள்எதுவும் இடம்பெறுவதில்லை எனத் தெரிவித்த இரா. சாணக்கியன், அனைத்து இனமக்களுக்கும் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தக்கூடிய புதியஅரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.இதேவேளை, சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு மாத்திரமே இந்தப்பாராளுமன்றத்தில் பதிலளிக்கப்படுவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இரா. சாணக்கியன் கடும் அதிருப்தியைவெளிப்படுத்தினார். “நாங்களும் இந்த நாட்டின் மக்களே. எமக்கும் இந்தநாட்டில் சகல அங்கீகாரங்களும் உள்ளன. எமது அங்கீகாரம் தொடர்ந்துமறுக்கப்படுகிறது” எனத் தெரிவித்த அவர், தமிழ் மக்களும் இலங்கையின்குடிமக்கள் என்ற வகையில் சம உரிமைகளுடனும் உரிய அங்கீகாரத்துடனும்வாழ்வதற்கான சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற மற்றுமொரு இனக்கலவரம் உருவாகாமல்தடுப்பதற்கு, தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழக்கூடிய வகையில் புதியஅரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.அத்தகைய அரசியலமைப்பே இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும்பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இறுதியாக, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த தனிநபர்பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்த இரா. சாணக்கியன், கறுப்பு ஜூலை இனக்கலவரம்தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள்சட்டத்தின் முன்நிறுத்தப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைவலியுறுத்தினார்.

No comments: