மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் 100ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் திருவுருவங்களைத் தாங்கிய தெய்வீக ரதபவனி நேற்று (03.10.2026) காலை 7:30 மணிக்கு காரைதீவில் இருந்து பக்தியுடன் தொடங்கியது.
காரைதீவு இராமகிருஷ்ண மிஷனிலிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை, மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
ரதபவனி பயண விவரம்:
நேற்று (03.10.2026 - சனிக்கிழமை): காலை 7:30 மணிக்கு காரைதீவில் இருந்து புறப்பட்டு குருக்கள்மடம் வரை செல்லும்.
இன்று (04.10.2026 - ஞாயிற்றுக்கிழமை): குருக்கள்மடத்தில் இருந்து புறப்பட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனை வந்தடையும்.
வழிநெடுகிலும் பக்தர்கள் பூரண கும்ப மரியாதை, மாலை அணிவித்தல் மற்றும் ஆரத்தி எடுத்துத் தங்களது அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.பக்தர்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்று இறையருள் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றனர்

No comments: