News Just In

10/04/2026 12:51:00 PM

யாழ்ப்பாணத்தில் புதிய குளம் அமைக்கும் பணி: நேரில் பார்வையிட்டு நிதியுதவி வழங்கிய சிறீதரன் எம்.

யாழ்ப்பாணத்தில் புதிய குளம் அமைக்கும் பணி: நேரில் பார்வையிட்டு நிதியுதவி வழங்கிய சிறீதரன் எம்.பி!



​புத்தூர்–மீசாலை வீதியில் கிரீன் லேயர் அமைப்பால் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளத்திற்குப் பாராளுமன்ற உறுப்பினர் நேரில் விஜயம் செய்தார்.
​இதன்போது, நீர்வளங்களைப் பாதுகாத்து எதிர்காலத் தேவைகளுக்காக அதிகளவில் பயன்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அமைப்பினர் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.
​புத்தூர்–மீசாலை வீதியில் கிரீன் லேயர் அமைப்பால் புதிய குளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக்கான பாராட்டுகளையும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.

​11 நாட்களாகத் தொடர்ந்த இப்பணிகளை நேரில் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர், கனடா "வாழவைப்போம்" அமைப்பின் நிறுவுநர் கிருஷ்ணர் மற்றும் அவரின் நண்பர் வசந்தகுமாரும் இணைந்து வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கிரீன் லேயர் அமைப்பிடம் கையளித்தார்.
​குறித்த குளத்தை மையப்படுத்தி எதிர்காலத்தில் சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தல், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் பேசப்பட்டது.

​புதிய குளம் அமைக்கும் பணிகள் மழை ஆரம்பிக்கும் வரையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும், அதன் பின்னர் அடுத்த ஆண்டு இரண்டாம் கட்டமாக எஞ்சிய பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கிரீன் லேயர் அமைப்பின் நிறுவுநர் ஆசிரியர் சசிக்குமார் தெரிவித்தார்.
​இதன்போது வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகக் காணி உத்தியோகத்தர் திரு. கோபாலசூரியர், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு. பிரபாகரன், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், ஓய்வு நிலை அதிபர் உள்ளிட்ட ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.

No comments: