இலங்கையில் செயற்பட்டு வரும் தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள், தாம் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு அமைவாக குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பைப் பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் செயலாளரால் தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு இது தொடர்பில் எழுத்துமூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை தொடர்ந்து பேணுவதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments: