News Just In

10/06/2026 12:03:00 PM

ஞானசார தேரரின் பரிதாப நிலை! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஞானசார தேரரின் பரிதாப நிலை! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு




சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டு சாதாரண வெள்ளை நிற உடையில் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments: