(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
இலங்கைத் தொழில் வழிகாட்டல் நிலையத்தில் கணினி பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் வழங்கி வைத்தார்.
மாவட்ட செயலக மனிதவளப் பிரிவு உத்தியோகத்தர்களினால் பயிற்றுவிக்கப்பட்ட 5ஆவது, 6ஆவது பிரிவைச் சேர்ந்தவர்களுக்கே இச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் க.பொ.த உயர்தரத்தை நிறைவு செய்த மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்துவதற்காக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து இப்பயிற்சி நெறியைத் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட உதவிச் செயலாளர் ஜி. பிரணவன், மனிதவள அபிவிருத்திப் பிரிவின் இணைப்பாளர் வி. மைக்கேல் கொலின், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.ஆர்.எம். பாயிஸ், ஏ. கருணாகரன் உட்பட மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்

No comments: