News Just In

10/19/2026 07:57:00 PM

மட்டக்களப்பு சகோதரர்கள் சர்வதேச கராத்தேப் போட்டியில் மூன்று தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

மட்டக்களப்பு சகோதரர்கள் சர்வதேச கராத்தேப் போட்டியில் மூன்று தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை



(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )

மட்டக்களப்பைச் சேர்ந்த சகோதரர்களான அனுருத்தன், ஜெயசிறீராம் ஆகிய சகோதரர்கள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற சர்வதேச கராத்தேப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று வெற்றிவாகை சூடியுள்ளனர்.

கடந்த 17.10.2026 அன்று வென்னப்புவவில் அமைந்துள்ள சேர் அல்பேர்ட் எப். பீரிஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற சர்வதேச திறந்த கராத்தேப் போட்டியில் பங்கேற்ற இரு சகோதரர்களும், கட்டா, குமித்தே ஆகிய பிரிவுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தி இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.

No comments: