News Just In

10/16/2026 10:30:00 AM

காரைதீவில் நவராத்திரி விழா !

காரைதீவில் நவராத்திரி விழா !



நூருல் ஹுதா உமர்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், காரைதீவு சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடத்தும் நவராத்திரி விழா – 2026 இன் மூன்றாம் நாள் நிகழ்வு, பூசை வழிபாடுகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய. அநிருத்தனனின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், காரைதீவு காருண்யா நாட்டியாலயம் மற்றும் சிவா நர்த்தன கலாலய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்ற உறுப்பினர் எஸ். சிவாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் பிரதம அதிதியாகவும், பணிமன்றத் தலைவர் எஸ். சுரநுதன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள வளவாளர் நா. சனாதனன், பண்ணிசை வளவாளர் ஜெயகணேஸ் புவனேஸ்வரி, பணிமன்ற உறுப்பினர் எஸ். பாக்கியநாதன், நடன ஆசிரியை இரவீந்திரன் கஜித்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், பணிமன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி மேற்கொண்டிருந்தார்

No comments: