News Just In

10/29/2026 12:57:00 PM

திருடனைப் பிடித்துக் கொடுத்தது குற்றமா? பொலிஸ் காவலுக்குப் பின் மரணம்! ஐவர் கைதால் வெடித்த சர்ச்சை

திருடனைப் பிடித்துக் கொடுத்தது குற்றமா? பொலிஸ் காவலுக்குப் பின் மரணம்! ஐவர் கைதால் வெடித்த சர்ச்சை

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த கிராம மக்களுக்கு எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குருநாகல் - கொபெய்கனே, பெத்தேகம பகுதியில் கடந்த 25ஆம் திகதி சந்தேகநபர் ஒருவரைப் பிரதேசவாசிகள் பிடித்துள்ளனர்.

அவரை மரத்தில் கட்டிவைத்து, ஒரு மணித்தியாலத்திற்குள் பொலிஸாருக்கு அறிவித்து, பாதுகாப்பாக ஒப்படைத்ததாகப் பிரதேசவாசிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், பொலிஸ் காவலில் இரண்டு நாட்கள் இருந்த சந்தேகநபர், கடந்த 27ஆம் திகதி இரவு நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பிரதேசவாசிகள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைதுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள உறவினர்கள், சந்தேகநபரை எவ்வித ஆபத்துமின்றி பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகக் கூறுகின்றனர்.

மேலும், தாக்குதல் இடம்பெற்றிருந்தால் அவரை முன்கூட்டியே வைத்தியசாலையில் அனுமதித்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு முன்னரும் உயிரிழந்த நபரால் மேற்கொள்ளப்பட்ட திருட்டுகள் குறித்து பலமுறை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதாகவும், அப்போது அவரைப் பிடித்துத் தன்னிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரே அறிவுறுத்தியதாகவும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் மரணம் மற்றும் ஐவரின் கைது தொடர்பில் உறவினர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன.

No comments: