News Just In

10/25/2026 01:14:00 PM

அமானுஷ்ய சக்தியால் அநுரவுக்கு உடல்நலக்குறைவு.. பின்னணியில் நாடகமாடும் பிக்குகள்

அமானுஷ்ய சக்தியால் அநுரவுக்கு உடல்நலக்குறைவு.. பின்னணியில் நாடகமாடும் பிக்குகள்


ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகள் பரப்பப்பட்டன.

இந்நிலையில், குறித்த செய்தி முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று உறுதிப்படுத்தியது.

இவ்வாறிருக்கையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி விகாரமஹாதேவி பூங்காவில் சத்யாகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் அண்மையில், ஸ்ரீ சமந்தபத்ர பிக்கு, மஹாசோனா என்ற துஷ்ட தேவதையை அழைத்து ஜனாதிபதியின் களிமண் உருவ பொம்மைக்கு நச்சு முட்களைக் குத்தி சாபமிடும் பில்லி சூனிய சடங்கை நடத்தினார்.

இதன்பின்னர், தங்களது மூடநம்பிக்கை சடங்கு பலனளித்து ஜனாதிபதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் காட்டி, அரசியல் ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்காகவே இந்த போலி செய்தி பரப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொறாமை மற்றும் பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த சடங்கு வெற்றிபெற்றுவிட்டது எனக் காட்டி மனநிறைவு அடைவதற்காகவே இவ்வாறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை, பௌத்த தத்துவத்திற்கு முற்றிலும் முரணான இந்த செயலைத் தொடர்ந்து, மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரோ, ஸ்ரீ சமந்தபத்ர பிக்குவை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: