News Just In

10/08/2026 08:57:00 AM

மின்மாற்றியை திருடிச்சென்ற நபர்கள் பொலிசார் விசாரணை..!

மின்மாற்றியை திருடிச்சென்ற நபர்கள் பொலிசார் விசாரணை..!



வவுனியா ஓமந்தை கொம்புவைத்தகுளம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றியை( திரான்ஸ்போமர்) இனம் தெரியாத நபர்கள் அகற்றியதுடன் அதில் இருந்த பெறுமதியான உபகரணங்களை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றிஅகற்றப்பட்டிருப்பதாக இலங்கை மின்சாரசபைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற மின்சாரபையின் அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார் தடயவியல் பொலிசாரின் உதவியுடன் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த மின்மாற்றியானது மின்சாரதூணில் இருந்து அகற்றப்பட்டு, உடைக்கப்பட்டு அதில் இருந்த பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் திருடிச்செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: