News Just In

10/08/2026 04:10:00 PM

மக்களின் காணிகளில் பெரும் உல்லாச விடுதி நிறுவனங்களுக்கு இலாபம்; பிரதேசசபைக்கு வரி செலுத்துவது சிறு வியாபாரிகளா?

மக்களின் காணிகளில் பெரும் உல்லாச விடுதி நிறுவனங்களுக்கு இலாபம்; பிரதேசசபைக்கு வரி செலுத்துவது சிறு வியாபாரிகளா?சாணக்கியன்கேள்வி ?


மக்களின் காணிகளில் பெரும் உல்லாச விடுதி நிறுவனங்களுக்கு இலாபம்; பிரதேசசபைக்கு வரி செலுத்துவது சிறு வியாபாரிகளா? வடக்கு – கிழக்கு சுற்றுலாவருவாயில் உள்ளூர் மக்களுக்கு உரிய பயன் கிடைக்க வேண்டும் –
பாராளுமன்றத்தில் சாணக்கியன் வலியுறுத்தல்.

ஆயுபோவன்’ அல்ல, ‘வணக்கம்’ – வடக்கு, கிழக்கின் கலாசாரத்தை மதிக்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலாத்துறை அபிவிருத்தியின்
மூலம் உருவாகும் வருவாய், வேலைவாய்ப்பு மற்றும் முதலீடுகள் அந்தந்த
பிரதேச மக்களுக்கும் உள்ளூர் நிறுவனங்களுக்கும் உரிய வகையில் சென்றடைவதைஉறுதி செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று (08) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

சுற்றுலாத்துறையின் செயல்திறன் பெரும்பாலும் நாட்டிற்கு வருகை தரும்
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு
மதிப்பிடப்படுகின்ற போதிலும், சுற்றுலா வருவாய் தொடர்பான மதிப்பீடுகள்
சராசரி தங்கும் காலம் மற்றும் நாளாந்த செலவினங்கள் குறித்த அனுமானங்களின்அடிப்படையிலேயே அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

2018 முதல் 2026 வரையிலான ஒவ்வொரு ஆண்டிற்குமான சுற்றுலாப் பயணிகளின்வருகை, சராசரி தங்கும் காலம், சராசரி நாளாந்த செலவினம் மற்றும்மதிப்பிடப்பட்ட சுற்றுலா வருவாய் தொடர்பான முழுமையான தரவுகளை,மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்களுடன்அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்தார்.

 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலா அபிவிருத்திக்காக
மாவட்ட ரீதியாக ஒதுக்கப்பட்ட மற்றும் உண்மையில் செலவிடப்பட்ட நிதி,
நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அவற்றை முன்னெடுத்த
நிறுவனங்கள் தொடர்பான விபரங்களையும் வெளியிட வேண்டும் என அவர்
தெரிவித்தார்.குறிப்பாக, தொல்பொருள் தளங்களுக்காக செலவிடப்படும் நிதிக்கும், உள்ளூர்சுற்றுலா வணிகங்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் உட்கட்டமைப்புவசதிகளுக்காக செலவிடப்படும் நிதிக்கும் இடையிலான விபரங்களும்வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என சாணக்கியன் குறிப்பிட்டார்.

அத்துடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கி வரும் ஹோட்டல்கள் மற்றும்
சுற்றுலா தங்குமிட நிறுவனங்களின் எண்ணிக்கை, அவற்றில் இலங்கை சுற்றுலாஅபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள அல்லது உரிமம்பெற்றுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் 2018 முதல் 2026 வரையிலானஒவ்வொரு ஆண்டிலும் சுற்றுலா அபிவிருத்தி வரி செலுத்திய நிறுவனங்களின்எண்ணிக்கை தொடர்பான தகவல்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும் என அவர்கோரினார்.

ஒவ்வொரு நிறுவனத்தினதும் அறை கொள்ளளவு, வருடாந்த வருவாய், பொருந்தக்கூடியவரி விகிதம், செலுத்த வேண்டிய வரி, செலுத்தப்பட்ட தொகை, நிலுவையில் உள்ளதொகை மற்றும் இலங்கை மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை போன்றதகவல்களும் மாவட்ட ரீதியாக வெளிப்படையாகக் கிடைக்க வேண்டும் என அவர்வலியுறுத்தினார்.

மேலும், புதிய சுற்றுலா மண்டலங்களை உருவாக்குவதற்கோ அல்லது ஹோட்டல்அபிவிருத்திக்காக அரச காணிகளை ஒதுக்குவதற்கோ முன்னர், உள்ளூர்வேலைவாய்ப்பு, உள்ளூர் கொள்முதல் மற்றும் சமூக நலன்கள் தொடர்பானநடைமுறைப்படுத்தக்கூடிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும்,அவற்றின் இணக்கம் தொடர்பான வருடாந்த மாவட்ட ரீதியான அறிக்கைகளை வெளியிடவேண்டும் என்றும் சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.

“வடக்கு – கிழக்கின் கலாசாரத்தை மதிக்க வேண்டும்” இதன்போது, வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் சுற்றுலாப்
பயணிகளை வரவேற்கும் போது நீண்டகாலமாக தமிழில் “வணக்கம்” எனக்
குறிப்பிடும் நடைமுறை காணப்பட்டதாகவும், அண்மைக்காலங்களில் அது
“ஆயுபோவன்” என மாற்றப்பட்டுள்ளதாகவும் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
இது பெரிய விடயமாக இல்லாவிட்டாலும், ஒவ்வொரு மாகாணத்தினதும் தனித்துவமானமொழி மற்றும் கலாசார நடைமுறைகளை மதித்து பின்பற்றுவது முக்கியமானது எனஅவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், “ஆயுபோவன்”
என்று குறிப்பிடுவது போன்று “வணக்கம்” என்று குறிப்பிடுவதும் நல்லதே எனத்
தெரிவித்ததுடன், குறித்த பகுதிகளில் “வணக்கம்”, “காலை வணக்கம்”, “மாலை
வணக்கம்” போன்ற தமிழ் வாழ்த்துக்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்த
முடியும் எனக் குறிப்பிட்டார்.

உள்ளூர் சுற்றுலா தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா அதிகாரசபையின் பிரதிநிதியாக
வாழைச்சேனை பகுதியில் செயற்படும் அதிகாரி தொடர்பிலும் சாணக்கியன் கேள்விஎழுப்பினார். மாவட்டத்தில் சாதாரண மக்களும் சுற்றுலாத்துறை சார்ந்த சிறுமற்றும் நடுத்தர தொழில்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்றும், பெரிய முதலீட்டாளர்களுக்கு மாத்திரம் வாய்ப்புகள்வழங்கப்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்
வலியுறுத்தினார்.சுற்றுலா அபிவிருத்தியின் பயன்கள் பெரிய முதலீட்டாளர்களிடம் மட்டும்குவியாமல், உள்ளூர் மக்களுக்கும் சிறு தொழில் முனைவோருக்கும் சென்றடையவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

பிரதேச சபைகளுக்கான வருவாய் குறித்து கேள்வி
சுற்றுலா அபிவிருத்தியின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சென்றடைய வேண்டிய சட்ட ஏற்பாடுகள்
தொடர்பிலும் சாணக்கியன் கவனம் செலுத்தினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா
நிறுவனங்களிடமிருந்து பிரதேச சபைகளுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் முறையாககிடைக்காத நிலை காணப்படுவதாகவும், இதனால் ஏற்கனவே நிதி நெருக்கடிகளைஎதிர்கொள்ளும் பிரதேச சபைகள் மேலும் பாதிக்கப்படுவதாகவும் அவர்சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித்த ஹேரத், வரி தொடர்பான சட்டங்களுக்குஅமைவாக செயற்படும் அதிகாரம் பிரதேச சபைகளுக்கு இருப்பதாகவும், வரிதொடர்பில் சில பிரச்சினைகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும்,வரிச் சட்டங்களைத் திருத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரச காணி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் விசாரணை தேவை
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில்பெருமளவிலான அரச காணிகள் தனியார் நிறுவனங்களுக்கும் அரசியல்ஆதரவாளர்களுக்கும் ஏக்கர் கணக்கில் வழங்கப்பட்டதாக சாணக்கியன்பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு காணிகளைப் பெற்ற தரப்பினரால் தற்போது சட்டத்திற்கு அமைவாகசெலுத்த வேண்டிய வரிகள் செலுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராயவேண்டும் என்றும், இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தின் அரசாங்க நிதிதொடர்பான குழுவின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்
கேட்டுக்கொண்டார்.

பிரதேச சபைகளை வெறுமனே குப்பைகளை அகற்றும் நிறுவனங்களாக மாத்திரம்கருதாமல், அவற்றுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை உறுதி செய்து நிதி ரீதியாகவலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மட்டக்களப்பின் கரையோரப் பகுதிகளில் புதிய சுற்றுலா தளங்கள்
ஜனாதிபதி அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தபோது,
மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளை அடையாளப்படுத்தி புதிய சுற்றுலா தளங்களைஉருவாக்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டிருந்ததை சாணக்கியன்நினைவூட்டினார்.

அதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் கடற்கரை மற்றும் கரையோரப் பகுதிகளின்சுற்றுலா potential-ஐ உரிய முறையில் பயன்படுத்தி, உள்ளூர் மக்களுக்கும்பொருளாதார நன்மைகளை வழங்கக்கூடிய வகையில் திட்டமிட்ட சுற்றுலாஅபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் அரசாங்கத்திடம்கோரிக்கை விடுத்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சுற்றுலா வளங்கள் நாட்டின்
பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதேவேளை, அந்தப் பகுதிகளில் வாழும்மக்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கும் நேரடியாகப் பயன்படவேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என சாணக்கியன் தெரிவித்தார்.

No comments: