News Just In

10/08/2026 03:43:00 PM

மறைந்த தலைவர் சி.மூ. இராசமாணிக்கம் அவர்களின் சிராத்த தின நினைவேந்தல்!

மறைந்த தலைவர் சி.மூ. இராசமாணிக்கம் அவர்களின் சிராத்த தின நினைவேந்தல்


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், பட்டிருப்புத்
தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் சி.மூ.
இராசமாணிக்கம் அவர்களின் சிராத்த தினம் நேற்று (07.10.2026)
அனுஷ்டிக்கப்பட்டது.

மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ மே. வினோராஜ்அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், முதற்கட்டமாகஅமரர் சி.மூ. இராசமாணிக்கம் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலிசெலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம்அவர்களின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த அமரர் சி.மூ.இராசமாணிக்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து,மலரஞ்சலி செலுத்தி நினைவு கூரப்பட்டது.

தமிழ் மக்களின் உரிமை, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் சமூக நலனுக்காகதமது வாழ்நாளை அர்ப்பணித்த அமரர் சி.மூ. இராசமாணிக்கம் அவர்களின் அரசியல்பங்களிப்பும், மக்கள் பணியும், தமிழினத்தின் உரிமைக்கான அவரதுஅர்ப்பணிப்பும் இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டன.

தவிசாளர் கருத்து தெரிவிக்கும் போது சி.மூ.இராசமாணிக்கம் ஐயாவின் அரசியல்பயணமும் மக்கள் சேவையும் எதிர்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக அமையவேண்டும் என்பதுடன், தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் அவர் பதித்ததடங்கள் என்றும் அழியாதவை என தெரிவித்தார்.


No comments: