இந்த ஆண்டில் இதுவரை41 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை மொத்தம் 41 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 21 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 9 மாதங்களில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் 36 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 7 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஒழுங்கமைக்கப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 14 துப்பாக்கிதாரிகளும் 12 வாகன சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குற்றச் செயல்களுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கினர் என கூறப்படும் 118 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
10/04/2026 09:15:00 AM
இந்த ஆண்டில்இதுவரை 41 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments: