News Just In

10/04/2026 09:17:00 AM

தங்க நகைகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்தவர் கைது

தங்க நகைகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள்  கொண்டுவந்தவர் கைது




ரூபாய் 3 கோடியே 65 லட்சத்து 19 ஆயிரத்து பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளியேற்ற முற்பட்ட இலங்கை பயணி ஒருவர் (10/03) காலை, விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கண்டி, பல்லேகல பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.

இவர் (10/03) காலை 09.30 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, அவர் தனது உடலில் 04 பார்சல்களாக மறைத்து வைத்திருந்த 996 கிராம் எடையுடைய தங்க நகைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

பின்னர், இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பயணியும் அவரால் கொண்டு வரப்பட்ட தங்க நகைகளும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

(10/04) அதிகாலை 04.45 மணி வரை இது தொடர்பான முறைப்படியான சுங்க விசாரணை நடைபெற்றதுடன், இதன்போது இந்த தங்க நகைகளை அரசாங்கத்திற்கு உரித்தாக்கவும் (பறிமுதல் செய்யவும்), குறித்த பயணிக்கு 37 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டது.



No comments: