News Just In

10/06/2026 04:02:00 PM

இலவச பாடநூல் முதற்கட்ட அச்சிடலுக்கு ரூ.1.6 பில்லியன் ஒதுக்கீடு!

இலவச பாடநூல் முதற்கட்ட அச்சிடலுக்கு ரூ.1.6 பில்லியன் ஒதுக்கீடு!




2027 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ள பாடநூல்கள் மற்றும் கற்றல் தொகுதிகளை (Modules) அச்சிடுவதற்கான முதற்கட்டக் கொள்முதல் நடவடிக்கைக்காக (Phase 1) அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 1, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கற்றல் தொகுதிகள் உட்பட 421 வகையான பாடநூல்கள் மற்றும் கற்றல் தொகுதிகள் அச்சிடப்படவுள்ளன.

இதற்காக தேசியப் போட்டித்தன்மை வாய்ந்த கொள்முதல் நடைமுறையின் கீழ் விலை மனுக்கள் கோரப்பட்டிருந்த நிலையில், 31 வில​ை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

விலை மனு மதிப்பீடுகளின் பின்னர், உயர்மட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பேரில், குறித்த அச்சிடல் பணிகளை 21 அச்சகங்களிடம் 1,614.69 மில்லியன் ரூபாய் தொகையில் ஒப்படைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தொகையில் பெறுமதி சேர் வரி (VAT) உள்ளடங்கவில்லை என அமைச்சரவைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

No comments: