-560334.jpg)
2026 மகளிர் ஆசியக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது.
டுபாயில் இன்று இரவு 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன.
இந்த இரு அணிகளும் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தன.
அப்போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி நடப்புச் சம்பியனாக திகழ்கின்றது.
இலங்கை மகளிர் அணி தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிய 3ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.
2012 ஆம் ஆண்டு முதல் இருபதுக்கு 20 ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஒவ்வொரு ஆண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதுவரை இந்திய அணி 3 முறை சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய இறுதிப்போட்டியை தொடரின் உள்நாட்டு ஔிபரப்பு உரிமையை பெற்றுள்ள சிரச ஊடக வலையமைப்பின் டீவி வன் தொலைக்காட்சி மற்றும் WWW.SIRASATV.LK இணையத்தளம் ஊடாக இறுதிப்போட்டியை நீங்கள் நேரலையில் பார்வையிட முடியும்
No comments: