News Just In

9/11/2026 02:38:00 PM

ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம் தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் கலந்துரையாடல்

ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம் தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் கலந்துரையாடல்


நூருல் ஹுதா உமர்

இலங்கை ஊடகவியலாளர்களின் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் “இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” (Sri Lanka Journalists' Trust Fund) ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று (10) வியாழக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீட தகவல் தொழில்நுட்ப மையத்தில் இடம்பெற்றது.

வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நிதியத்தின் நோக்கங்கள், செயற்பாடுகள், நிதி திரட்டும் மூலோபாயம் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு தொடர்பில் பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால் கணினித் திரைக் காட்சி மூலம் விளக்கமளித்தார்.

இதன்போது பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால் மற்றும் கலாநிதி எம்.ஐ.எம். றியாத் ஆகியோர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத், அமைப்பாளர் எம்.வை. அமீர், செயலாளர் நூருல் ஹுதா உமர், உப தலைவர் எஸ். தஸ்தகீர், உப செயலாளர் என்.எம். அப்றாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான எஸ். ஜனூஸ், என்.எம். சிறாஜுதீன், ஏ.வி.எம். ராஜித், ஜே.எம். வாசித் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

ஊடகவியலாளர்களின் நலன், அவசரகால உதவி மற்றும் எதிர்கால சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிலையான நிதியக் கட்டமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

No comments: