News Just In

9/07/2026 05:59:00 PM

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றம உத்தரவு!

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றம உத்தரவு



மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31 ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர்இவ்வாறுகைதுசெய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் நாளை(08.09.2026) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments: