News Just In

9/05/2026 10:16:00 AM

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை - சந்தேக நபரின் சடலமும் மீட்பு

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை - சந்தேக நபரின் சடலமும் மீட்பு





கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை - பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

18 வயதான குறித்த யுவதி கழுத்து அறுக்கப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு நேற்று முன்தினம் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு வந்து தங்கியிருந்த கனகசபை மீகா என தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் உடுபுஸ்ஸல்லாவை, சென்ட் வத்தையைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் 2020ஆம் ஆண்டு கேலி செய்தமைக்குப் பழிவாங்கும் முகமாக அவசகவெல்ல பிரதேசத்தில் நபரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவராகும்.

தற்போது அது குறித்த வழக்கு விசாரணையில் உள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட யுவுதி சந்தேகநபருடன் காதல் உறவைப் பேணி வந்துள்ளார்.

சந்தேகநபர் அவரைத் தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து, வீட்டில் இருந்த அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தறுத்து, கண்களைத் தோண்டி படுகொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யுவதியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய நபரின் சடலம் அத்துருகிரிய பொலிஸ் பிரிவில் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

No comments: