News Just In

9/08/2026 05:41:00 PM

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!


அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்றையதினம் (08) செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றுச் சென்ற சிரேஷ்ட பரிசாரகர் ஏ.எல்.கமால்டீன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

பாடசாலை மாணவனாக வெள்ளைச் சீருடையுடன் தனது கல்விப் பயணத்தைத் தொடங்கிய ஏ.எல்.கமால்டீன், பின்நாட்களில் வைத்தியசாலை பணித்தளத்தில் - வெள்ளை நிற ஆடையணிந்து, வைத்தியசாலை சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.

நோயாளிகளின் துயர் துடைப்பதிலும், கனிவான உபசரிப்பிலும், கடமை தவறா அர்ப்பணிப்பிலும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்து, "சிரேஷ்ட பரிசாரகர்" என்ற உயர் நிலையை எட்டிய அவரது பணிப் பயணம் மிகவும் பாராட்டுக்குரியது.

தனது வாழ்நாளின் பெரும் பகுதியை பிறர் நலம் பேணவும், நோய் தீர்க்கும் பணிக்குத் துணையாக நிற்கவும் செலவிட்ட மரியாதைக்குரிய சிரேஷ்ட பரிசாரகர் ஏ.எல்.கமால்டீன் அவர்களின் ஓய்வுக்காலம் சிறக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கடமைப் பொறுப்புகளிலிருந்து ஓய்வுபெறும் இத்தருனத்தில், இறைவனின் பேரருளால் எவ்வித நோயுமின்றி, மன அமைதியும், ஆரோக்கியமும் நிறைந்த நீண்ட ஆயுளைப்பெற வாழ்த்துகிறேன்.

இதுவரை காலமும் சமூகத்திற்காகவும் நோயாளிகளுக்காகவும் செலவிட்ட காலம் கடந்து, இனிவரும் காலத்தில் தனது குடும்பத்தினருடனும் பேரப்பிள்ளையுடனும் மகிழ்ச்சியாகச் செலவிட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக! ஆமீன்!!

சிரேஷ்ட ஊடகவியலாளர் & எழுத்தாளர்
அபு அலா

No comments: