News Just In

8/05/2026 06:05:00 AM

பிள்ளையான் விவகாரத்தில் சிக்கிய பிரித்தானிய 'பாயிஸ்'!

பிள்ளையான் விவகாரத்தில் சிக்கிய பிரித்தானிய 'பாயிஸ்'! 


பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) உட்பட மூவருக்கு எதிரான விளக்கமறியல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியைச் சேர்ந்த 'பொலீஸ் பாயிஸ்' (முகமது பாயிஸ்) என்பவருக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, சர்வதேச பிடியாணைக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

'பொலிஸ் பாயிஸ்' என்பவர் பல்வேறு கொலைகள் மற்றும் சமூகங்களுக்கு இடையே மோதல்களைத் தூண்டிய சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பலீல் உள்ளிட்டோரின் படுகொலைகளுடன் இவருக்குத் தொடர்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'ஈமானிய நெஞ்சங்கள்' எனப்படும் தீவிரவாத அமைப்புடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வன்முறைகளை முன்னெடுத்ததாகச் சொல்லப்படுகிறது . பலர் அரசு சாட்சிகளாக மாறியுள்ளது இந்த விசாரணைகளுக்குப் பெரும் வலு சேர்த்துள்ளது.

No comments: